‘பினராயி நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்’: நட்டா
கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.


கேரள முதல்வர் பினராயி விஜயன் மக்களிடம் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
கேரளம், தமிழகம், புதுவை உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் கேரளத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள நட்டா திருவனந்தபுரத்தில் நடத்த கூட்டத்தில் பேசுகையில்,
வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில், கேரள மக்களின் ஆதரவை பாஜக பெறப்போகிறது. தற்போது உள்ள அரசாங்கத்தின் மீது மக்கள் வெறுப்பில் உள்ளார்கள். இது ஊழல் நிறைந்த அரசு.
முதல்வர் அலுவலகத்தின் தங்கக் கடத்தல் வழக்கு கேரள மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து மலையாள மக்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. பினராயி விஜயன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். விசாரணை முடிவிற்கு வரும்போது மேலும் பல அமைச்சர்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...