பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சசிகலாவிற்கு கார் கொடுத்தவர் கட்சியிலிருந்து நீக்கம்

சசிகலாவிற்கு கட்சிக் கொடியுடன் கார் வழங்கியவர் உள்பட 7 பேர் கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்குவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

News image
சசிகலாவிற்கு கார் கொடுத்தவர் கட்சியிலிருந்து நீக்கம்
Updated On :8 பிப்ரவரி 2021, 3:43 pm

DIN

சசிகலாவிற்கு கட்சிக் கொடியுடன் கார் வழங்கியவர் உள்பட 7 பேர் கட்சியின் அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்குவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரில் இருந்து நான்கு ஆண்டு சிறை தண்டனைக்கு பிறகு சென்னை திரும்பும் சசிகலா, அதிமுக கொடி கட்டிய காரில் பயணம் செய்யக்கூடாது என காவல்துறை நோட்டீஸ் வழங்கிய நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.சம்பங்கி என்பவர் கட்சிக் கொடி கட்டிய அவரது காரை சசிகலா பயனம் செய்ய வழங்கினார்.

இந்நிலையில், சசிகலாவிற்கு வரவேற்பு வழங்கியதற்காக எஸ்.ஆர். சம்பங்கி உள்பட 7 பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில்,

கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டாதாலும், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்டதாலும் இன்று முதல் டி.தட்சணாமூர்த்தி, எஸ்.ஆர்.சம்பங்கி, பி.சந்திரசேகர ரெட்டி, ஜானகி ரவீந்திர ரெட்டி, ஆர்.பிரசாந்த் குமார், ஏ.வி.நாகராஜ், வி.ஆனந்த் ஆகிய 7 பேர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.