சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சங்ககிரியில் 118 பயனாளிகளுக்கு மானிய விலை இருசக்கர வாகனம்

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 22 ஊôரட்சிகளில் பணிக்கு செல்லும் 118 பயனாளிகளுக்கு மானிய விலையில்  அம்மா இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான உத்தரவுகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

News image
சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவி எம்.மகேஸ்வரிமருதாசலம்  மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வாங்குவதற்காக உத்தரவினை பயனாளிக்கு செவ்வாய்க்கிழமை வழங்குகிறார்.
Updated On :9 பிப்ரவரி 2021, 1:19 pm

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 22 ஊôரட்சிகளில் பணிக்கு செல்லும் 118 பயனாளிகளுக்கு மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வாங்குவதற்கான உத்தரவுகள் வழங்கும் விழா சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவி எம்.மகேஸ்வரிமருதாசலம் தலைமை வகித்து  சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட 22 ஊராட்சிகளில் வேலைக்கு செல்லும் 118  பெண் பயனாளிகளுக்கு அம்மா இரு சக்கர வாகனத்திட்டத்தின் கீழ் மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான உத்தரவினை வழங்கினார். 

ஊராட்சி ஒன்றியக்குழுதுணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், சங்ககிரி நகர கூட்டுறவு வங்கித்தலைவர் என்.சி.ஆர்.ரத்தினம்,  அதிமுக மேற்கு ஒன்றியச் செயலர் எஸ்.சுந்தரராஜன்,  அதிமுக கிழக்கு ஒன்றிய துணைச் செயலர் மருதாஜலம், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் என்.எஸ்.ரவிச்சந்திரன்,  வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) எம்.அனுராதா  உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.