47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

தமிழிசையுடன் புதுவை முதல்வர் சந்திப்பு

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை செளந்தரராஜனுடன் முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை சந்தித்தார்.

News image
தமிழிசையுடன் புதுவை முதல்வர் சந்திப்பு
Updated On :17 பிப்ரவரி 2021, 2:34 pm

ANI


புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை செளந்தரராஜனுடன் முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை சந்தித்தார்.

புதுச்சேரியில் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை முதல்வர் நாராயணசாமி கடந்த 10-ம் தேதி நேரில் சந்தித்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடியை திரும்பப் பெற வேண்டும் என புகார் மனு அளித்தார். 

இதையடுத்து தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்தரராஜனை கூடுதல் பொறுப்பாக புதுவை துணைநிலை ஆளுநராக குடியரசுத் தலைவர் செவ்வாய்க்கிழமை நியமித்தார்.

இந்நிலையில், இன்று புதுவை வந்தடைந்த துணைநிலை ஆளுநரை, அவரது மாளிகையில் நேரில் சென்று புதுவை முதல்வர் நாராயணசாமி சந்தித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.