'மேற்குவங்கத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை': மாநில காங். தலைவர்

மேற்கு வங்க மாநித்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என மாநில காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்துள்ளார்.
அதிர் ரஞ்சன் சௌத்ரி
அதிர் ரஞ்சன் சௌத்ரி

   
மேற்கு வங்க மாநித்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என மாநில காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநில தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜாகிர் உசைன் புதன்கிழமை இரவு முர்ஷிதாபாத் மாவட்டம் நிம்திதா ரயில் நிலையம் சென்றார். அங்கிருந்து கொல்கத்தா செல்லும் ரயிலில் செல்ல காத்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அமைச்சர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். 

குண்டுகள் வெடித்து சிதறியதில் அமைச்சர் ஜாகிர் உசைன் மற்றும் சிலர் பலத்த காயமடைந்தனர். அமைச்சருக்கு ஒரு கை மற்றும் ஒரு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் கூறியதாவது,

மேற்குவங்கத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. இந்த மாநிலத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. குண்டுவீச்சு சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com