மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உத்தரகண்ட் வெள்ளம்: இதுவரை 61 உடல்கள் மீட்பு

உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் இன்று மேலும் இரண்டு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை வெள்ளத்தில் சிக்கி பலியானர்வளின் எண்ணிக்கை 61-ஆக அதிகரித்துள்ளது.

News image
உத்தரகண்ட் வெள்ளம்: இதுவரை 61 உடல்கள் மீட்பு
Updated On :18 பிப்ரவரி 2021, 12:30 pm

ANI

உத்தரகண்ட் மாநிலம் சமோலியில் நேரிட்ட விபத்தில் இன்று மேலும் இரண்டு சடலங்கள் கண்டறியப்பட்டுள்ளதால், இதுவரை வெள்ளத்தில் சிக்கி பலியானர்வளின் எண்ணிக்கை 61-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள நந்தாதேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து சரிந்ததில், அங்குள்ள தெளலி கங்கா, ரிஷிகங்கா, அலகநந்தா நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனால் அந்தப் பகுதியில் நடைபெற்று வந்த தபோவன்-விஷ்ணுகாட் நீா்மின் நிலைய திட்டப் பணிகளும், ரிஷிகங்கா நீா்மின் நிலைய திட்டப் பணிகளும் பலத்த சேதமடைந்தன. 

அந்தத் திட்டப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சுரங்கங்களில் வெள்ள நீா் புகுந்ததால், அவற்றில் பணிபுரிந்து வந்த 150க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பலா் சுரங்கங்களுக்குள் சிக்கிக் கொண்டனா்.

ராணுவ வீரா்கள், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையினா், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா் உள்ளிட்டோா் தொடர்ந்து 11வது நாளாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். 

இந்த நிலையில் சுரங்கப் பகுதியிலிருந்து இன்று மேலும் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து, பேரிடரால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 61-ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.