அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

விவசாயிகளுடன் அடுத்த கட்ட பேச்சுக்கு தயார்: மத்திய அமைச்சர்

தில்லியில் போராடு வரும் விவசாயிகளுடன் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)
Updated On :25 பிப்ரவரி 2021, 12:02 pm

ANI

தில்லியில் போராடு வரும் விவசாயிகளுடன் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் கடந்த 3 மாதங்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்களுடன் மத்திய அரசு இதுவரை 11 முறை பேச்சுவாா்த்தை நடத்தியும் எந்த முன்னேறமும் ஏற்படவில்லை. 11-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, ஜனவரி 26-ஆம் தேதி நடந்த விவசாயிகளின் டிராக்டா் பேரணி வன்முறையில் முடிந்தது.

இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சர் கூறியதாவது,

11 கட்டப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. நாங்கள் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் தற்போதைக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்த முடியாது. உச்சநீதிமன்றம் அமைத்தக் குழு அவர்களின் அறிக்கையை நீதிமன்றத்திற்கு இன்னும் தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் பிரச்னை தொடா்பான வழக்கை கடந்த ஜனவரி 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. அத்துடன் 4 போ் கொண்ட சமரசக் குழுவையும் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.