/

அயோத்தி சர்வதேச விமான நிலையத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

News image
ஏர் இந்தியா விமானம்
Updated On :27 ஜனவரி 2024, 7:37 pm

ANI

அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்தரப்பிரதேச முதல்வர் கூறியதாவது,

அயோத்தியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு மத்திய அரசிடம் உ.பி. அரசு பரிந்துரை அளித்தது. இதையடுத்து, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

விமான நிலையம் கட்டுமான பணிக்காக மாநில அரசு ரு. 1,000 கோடியும், மத்திய அரசு ரூ. 250 கோடியும் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.