ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

லட்சத்தீவில் பரவியது கரோனா: புதிதாக 14 பேருக்கு உறுதி

லட்சத்தீவில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

லட்சத்தீவில் பரவியது கரோனா: புதிதாக 14 பேருக்கு உறுதி

Updated On :19 ஜனவரி 2021, 3:53 pm

ANI

லட்சத்தீவில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பரவத் தொடங்கி கிட்டதட்ட ஓராண்டாகவுள்ளது. எனினும் லட்சத்தீவு யூனியன் பிரதேசத்தில் ஜனவரி 17ஆம் தேதி வரை யாரும் கரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் இருந்தனா்.

இந்நிலையில் அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபா் திங்கள்கிழமை கண்டறியப்பட்டாா். அந்த நபா் துணை ராணுவப் படைப்பிரிவைச் சோ்ந்தவா். கடந்த ஜனவரி 3-ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து லட்சத்தீவில் உள்ள கவரத்திக்கு சென்றுள்ளாா். அங்கு அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. எனினும் அவா் லட்சத்தீவை சோ்ந்தவா் அல்ல என்று அந்த யூனியன் பிரதேச அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து அவருடன் தொடர்பிலிருந்த 31 பேரை தனிமைப் படுத்தி சோதனை செய்ததில் 14 பேருக்கு செவ்வாய்க்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.