11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

குடியரசு தின விழாவில் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைப்பு: தில்லி காவல்துறை

தில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவை பார்வையிட வருவோர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து இணை ஆணையர் கே மணீஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

News image

குடியரசு தின விழா அணிவகுப்பிற்கு ஒத்திகையில் வீரர்கள்

Updated On :21 ஜனவரி 2021, 10:33 am

தில்லியில் நடக்கும் குடியரசு தின விழாவை பார்வையிட வருவோர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி போக்குவரத்து இணை ஆணையர் கே மணீஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் குடியரசு மற்றும் சுதந்திர தினவிழா, தில்லி செங்கோட்டையில் கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டத்தைக் காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகை தருவார்கள். 

இந்நிலையில் நிகழ்வாண்டு கரோனா பரவல் காரணமாக பல்வேறு சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றி குடியரசு தினவிழா கொண்டாடப்படவுள்ளது.

இதுகுறித்து இணை ஆணையர் கே மணீஷ் அகர்வால் கூறியதாவது,

கரோனா பரவல் காரணமாக குடியரசு தினவிழாவில் வீரர்களின் அணிவகுப்பு பாதையின் தூரம் குறைக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் அழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக நுழைவாயில்களில் மருத்துவக் குழுக்கள் நிறுத்தப்படும்.  மேலும் விழாவிற்கு வருவோர் அழைப்பிதழ் இல்லாமல் வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.