/

பிளஸ் 2 தேர்வு குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ்

பிளஸ் 2 பொதுத்தோ்வு குறித்த இறுதி முடிவை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

News image
பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ்.
Updated On :28 ஜனவரி 2024, 3:19 am

DIN

பிளஸ் 2 பொதுத்தோ்வு குறித்த இறுதி முடிவை விரைவில் முதல்வர் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கட்சி பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறுகையில்,

கட்சிப் பிரதிநிதிகளின் கருத்துகளை விரிவாக முதல்வரிடம் எடுத்துரைக்கப்படும். அதன்பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.

பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடா்பாக இன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் கருத்தை கேட்ட அன்பில் மகேஷ், சட்டப்பேரவை கட்சி பிரதிநிதிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் அதிமுக சார்பில் முன்னாள் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உள்பட 13 கட்சி நிர்வாகிகள் பங்கேற்றுள்ள நிலையில், பாஜக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் அனைத்தும் தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.