தமிழகத்தில் 7.62 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 7.62 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் இதுவரை 7.62 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.
நாட்டில் முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 60 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்நிலையில், இன்று தமிழகத்தில் 92,208 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில், 90,266 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மற்றும் 1,942 பேருக்கு கோவேக்ஷின் தடுப்பூசி போடப்பட்டது.
இதுவரை 44 நாள்களில் மொத்தம் 7,62,604 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...