சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

புதுவையில் பாமக தனித்துப் போட்டி

புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

News image
பாமக தலைவர் ராமதாஸ் (கோப்புப்படம்)
Updated On :27 ஜனவரி 2024, 7:41 pm

DIN

புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

புதுவை சட்டப்பேரவைத் தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே இன்று காலை கூட்டணி உறுதியாகி, தொகுதி பங்கீட்டில் கையெழுத்தானது. அதில், என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகளும், மீதமுள்ள 14 தொகுதிகள் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்படும் என ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்நிலையில், பாஜக மேலிடப் பொறுப்பாளர் சுரானா, பாமகவிற்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்படாததால், பாமக தனித்து போட்டியிடும் என புதுச்சேரி மாநில பாமக துணைத் தலைவர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில், பாஜகவுடன் இணைந்து பாமக தேர்தலை சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.