மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

‘பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேச அனுமதிக்கவில்லை’: மல்லிகாா்ஜுன காா்கே

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேச நாடாளுமன்றத்தில் அனுமதிக்கவில்லை என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளார்.

News image

மல்லிகாா்ஜுன காா்கே

Updated On :10 மார்ச் 2021, 11:24 am

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேச நாடாளுமன்றத்தில் அனுமதிக்கவில்லை என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி திங்கள்கிழமை (மாா்ச் 8) தொடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தொடர்ந்து 3 நாள்களாக அமளியில் ஈடுபட்டனர். 

இதனைத் தொடர்ந்து மக்களவை மார்ச் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபைத் தலைவர் அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில்,

பெட்ரோலிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை இதற்கு முன்பு இவ்வளவு உயர்ந்ததில்லை.

நாடாளுமன்றத்தில், அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் குறித்த பிரச்சினையை எழுப்ப முயன்றோம், ஆனால் அது குறித்து விவாதத்திற்கு அனுமதிக்கவில்லை எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.