கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மார்ச் 14-ல் திரிணமூல் தேர்தல் அறிக்கை வெளியீடு

திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மார்ச் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

News image
மார்ச் 14-ல் திரிணமூல் தேர்தல் அறிக்கை வெளியீடு
Updated On :12 மார்ச் 2021, 9:49 am

ANI

திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கை மார்ச் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற மார்ச் 27ஆம் தேதிமுதல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், திரிணமூல், பாஜக மற்றும் காங்கிரஸ் - இடதுசாரி கூட்டணி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்த தேர்தலுக்கான கட்சிகளின் தேர்தல் அறிக்கை அனைத்து கட்சிகளின் தயாரித்து வருகின்றன.

இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை காளிகாட்டில் மார்ச் 11ஆம் தேதி கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி வெளியிடவிருந்த நிலையில், புதன்கிழமை இரவு பிரசாரத்தின் போது ஏற்பட்ட கால் எலும்பு முறிவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 14) தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.