பெங்களூரில் நாளைமுதல் உணவகங்கள் மூடல்!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சட்டப்பேரவைத் தேர்தல்: இதுவரை ரூ. 331 கோடி பறிமுதல்

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை மொத்தம் ரூ.331 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image
இந்திய தேர்தல் ஆணையம்
Updated On :17 மார்ச் 2021, 2:53 pm

DIN


சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் இதுவரை மொத்தம் ரூ.331 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தியில்,

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியில் மேற்கொண்ட தேர்தல் செலவின கண்காணிப்பு நடவடிக்கையில் கடந்த 16ம் தேதி வரை, ரூ.331 கோடி மதிப்பில் ரொக்க பணம், மது, இலவச பொருட்கள், தங்கம், வெள்ளிப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் கடந்த 16ம் தேதி வரை, ரூ.50.86 கோடி ரொக்கப் பணம், ரூ.1.32 கோடி மதிப்பிலான மது, ரூ.35 லட்சம் மதிப்பிலான போதைப் பொருள், ரூ.14.06 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள், ரூ.61.04 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளிப் பொருட்கள் என மொத்தம் ரூ.127.64 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநிலங்களில் கடந்த 2016ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடந்தபோது, பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணம் மற்றும் பொருட்களின் மொத்தம் மதிப்பு ரூ.225.77 கோடி.

சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கருப்பு பணம் செலவிடப்படுவதை தீவிரமாக கண்காணிக்க தேர்தல் செலவின  கண்காணிப்பாளர்கள் 295 பேரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  தேர்தல் செலவினங்களை கண்காணிக்கும் சிறப்பு அதிகாரிகளாக முன்னாள் வருமானவரித்துறை உயர் அதிகாரிகள் திருமிகு மது மகாஜன், பி.ஆர்.பாலகிருஷ்ணன் ஆகியோரையும், மேற்குவங்கத்தில் கண்காணிக்க  திரு பி. முரளி குமாரையும், அசாம் மாநிலத்துக்கு திருமிகு நீனா நிகாம், கேரளாவுக்கு திரு புஷ்பிந்தர் சிங் புனிகா என்பவரையும் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

வருமான வரித்துறையில் திறம்பட பணியாற்றிய இவர்கள், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். கருப்பு பணம் அதிகளவில் செலவிடப்படும் தொகுதிகளாக மொத்தம் 259 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இங்கு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது தொடர்பாக, அமலாக்க அமைப்புகளின் உயர் அதிகாரிகளுடன் பல கூட்டங்களை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது.

இது தொடர்பாக வருவாய் செயலாளர், நேரடி வரி மற்றும் மறைமுக வரி வாரிய தலைவர்கள், நிதி புலனாய்வு பிரிவு இயக்குனர் ஆகியோருடன் தேர்தல் ஆணையம் கடந்த 2 ஆம் தேதி ஆலோசனை நடத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.