எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

முதல்கட்டத் தேர்தல்: 4 மணி வரை அசாமில் 62%, மேற்கு வங்கத்தில் 70% வாக்குகள் பதிவு

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 4 மணி அசாமில் 62 சதவிகிதம், மேற்கு வங்கத்தில் 70 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

News image
Updated On :27 மார்ச் 2021, 11:20 am

ANI

மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நடைபெற்று வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் மதியம் 4 மணி அசாமில் 62 சதவிகிதம், மேற்கு வங்கத்தில் 70 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 294 உறுப்பினா்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு 8 கட்டங்களாக தோ்தல் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 30 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் காலை 4 மணி நிலவரப்படி மேற்குவஙகத்தில் 70.17% வாக்குகள் பதிவாகியுள்ளன. 

அதேபோல் அசாமில் 123 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக 47 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அதனைத் தொடர்ந்து காலை 4 மணி நிலவரப்படி 62.36% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்குப்பதிவையொட்டி மத்திய காவல்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.