இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்களை அனுப்பிய அமெரிக்கா, அயர்லாந்து

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்க, அயர்லாந்து நாடுகளிலுருந்து அனுப்பப்பட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தது.

News image

அமெரிக்காவிலிருந்து மருத்துவ உபகரணங்கள் கொண்டு வந்த விமானம்

Updated On :5 மே 2021, 6:48 am

ANI

நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்கா, அயர்லாந்து நாடுகளிலுருந்து அனுப்பப்பட்ட மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்தடைந்தது.

இந்தியாவில் நாள்தோறும் 4 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.

இதனால் நாட்டில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், கரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பல நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்காவிலிருந்து 5வது கட்டமாக 545 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் தில்லி விமான நிலையம் வந்தடைந்தது.

Story image

மேலும், அயர்லாந்து நாட்டிலிருந்து இரண்டாம் கட்டமாக 2 ஆக்ஸிஜன் தயாரிக்கும் உபகரணங்கள், 548 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 365 ஆக்ஸிஜன் வெண்டிலேட்டர்கள் மற்றும் சில மருத்துவ உபகரணங்களை இன்று தில்லி வந்தடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.