புதுச்சேரி மாநிலத்தில் ஒரே நாளில் 1,598 பேருக்கு கரோனா: 20 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 19 நபர்களும், காரைகாலில் 1 நபரும் கரோனாவால் உயிரிழந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,199 ஆக உயர்ந்துள்ளது.


புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 139 பேருக்கு பரிசோதனை செய்ததில், புதுச்சேரியில் மட்டும் 1,295 நபர்களுக்கும், காரைக்காலில் 260 நபர்களுக்கும், ஏனாமில் 103 நபர்களுக்கும், மாஹேவில் 40 நபர்களுக்கும் என மொத்தம் 1, 598 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது மாநிலத்தில் 17,228 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 62,198 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 19 நபர்களும், காரைகாலில் 1 நபரும் கரோனாவால் உயிரிழந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,199 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை மாநிலத்தில் மொத்தமாக 82,545 நபர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரியில் முதலாவது மற்றும் இரண்டாவது கரோனா தடுப்பூசிகள் என இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 935 நபர்களுக்கு போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...