சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியது

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :15 மே 2021, 5:06 am

DIN

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை காலை முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து டோக்கன் முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அங்கு நோயாளிகளும் வருவதால் கூட்டம் அதிகம் காணப்பட்டதை அடுத்து, ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கீழ்ப்பாகம் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆண்கள் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள 4 கவுண்டர்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாள் ஒன்றுக்கு 300 பேருக்கு மருந்து வழங்கப்படும் என்றும் கூட்டத்தைத் தவிர்க்க நேரு விளையாட்டரங்கில் கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.