வங்கக்கடலில் மே 24-ல் உருவாகிறது புயல்
வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மே 24ஆம் தேதி புயல் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


வங்கக்கடலில் நாளை மறுநாள் உருவாகவுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மே 24ஆம் தேதி புயல் வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே 23-ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து மே 24ஆம் தேதி புயலாக மாறவுள்ளது.
இந்த புயல் மே 26ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் மே 22ஆம் தேதி முதல் வங்கக்கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி கடந்த 13-ஆம் தேதி உருவானது. இது, அடுத்தடுத்து வலுவடைந்து, கடந்த 15-ஆம்தேதி ‘டவ்-தே’ புயலாக மாறியது. இந்தப் புயல், மேலும் வலுவடைந்து உச்ச உயா் தீவிர புயலாக மாறி, டையூவுக்கு 20 கி.மீ. தொலைவில் வடகிழக்கு திசையில் செளராஷ்டிரா கரையை மே 17-ஆம் தேதி கடந்தது. இதன்பிறகு, இந்தப் புயல் படிப்படியாக வலுவிழந்தாலும், இதன் தாக்கம் நீடிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...