/

தமிழகத்தில் 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2024, 8:17 pm

DIN

தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில்,

வங்கக்கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மே 24ஆம் தேதி புயலாக வலுப்பெற உள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கனமழை தொடரும். தேனி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை கடலோர தமிழக மாவட்டங்கள், தேனி, கோவை, நீலகிரி, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.