யாஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசாவில் தடுப்பூசி போடும் பணி, கரோனா பரிசோதனைகள் ஆகியவற்றை மூன்று நாள்களுக்கு மாநில சுகாதாரத்துறை நிறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு வங்க கடலில் இன்று காலை வலுப்பெற்றுள்ள யாஸ் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் ஒடிசா-மேற்குவங்க கடற்கரையை நோக்கி நகர்ந்து, வரும் 26ஆம் தேதி பிற்பகல் பாரதீப்-சாகர் தீவுக்கு இடையே கடக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நாளை முதல் மே 27ஆம் தேதி வரை பாலசூர், பத்ராக், கேந்திரபாரா, ஜகத்சிங்க்பூர், மயூர்பஞ்ச் மற்றும் கியோஞ்சர் மாவட்டங்களில் ஆகிய மாவட்டங்களில் கரோனா பரிசோதனை, தடுப்பூசி, வீடு வீடாக சென்று காய்ச்சல் கணக்கெடுப்பு போன்ற பணிகள் நடைபெறாது.
கேந்திரபாரா, ஜகத்சிங்க்பூர் மற்றும் கியோன்ஜார் மாவட்டங்களில் புயல் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படுவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

970 கோல்கள்: கோப்பை இல்லையென கிண்டல் செய்தவர்களுக்கு சைகையில் பதிலளித்த ரொனால்டோ!

தனுஷ் - விக்னேஷ் ராஜா கூட்டணி வெல்லுமா? கர - திரை விமர்சனம்!

புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு!

யுபிஎஸ்சி: இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


