கரோனா நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்தும் முறை ரத்து: மகாராஷ்டிர அமைச்சர்

மகாராஷ்டிரத்தில் கரோனா அதிகமாக உள்ள மாவட்டங்களில் நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் முறையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரத்தில் கரோனா அதிகமாக உள்ள மாவட்டங்களில் நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் முறையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் பேசியது,

தற்போது மகாராஷ்டிரத்தின் நேர்மறை விகிதம் 12 சதவீதமாகவும், குணமடைவோர் விகிதம் 93 சதவீதமாகவும் உள்ளது.

கருப்பு பூஞ்சையால் இதுவரை 2,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட்ட நோயாக வகைபடுத்தப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் கரோனா அதிகமாக உள்ள 18 மாவட்டங்களில் நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் முறையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நோயாளிகள் அனைவரும் அருகில் உள்ள கரோனா மையத்தில் அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com