மும்பை: பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிப்பு
மும்பையில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


மும்பையில் தொடர்ந்து தொற்றின் எண்ணிக்கை குறைந்து காணப்படுவதால் பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா இரண்டாம் அலை பரவலால் கடந்த மாதம் முதல் அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மும்பையில் தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து இன்று 676 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பொதுமுடக்கத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள அனைத்து கடைகளும் நாளைமுதல் காலை 7 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சாலையின் வலதுபுறம் உள்ள கடைகள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளிலும், இடதுபுறம் உள்ள கடைகள் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் செயல்படும். இரண்டாவது வாரம் இந்த முறை மாறி செயல்படுத்தப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்துக் கடைகளும் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...