பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஓரிரு நாள்களில் நெட் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு: யுஜிசி

ஓரிரு நாள்களில் நெட் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
யுஜிசி
Updated On :16 பிப்ரவரி 2022, 9:06 am

DIN

ஓரிரு நாள்களில் நெட் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட அறிவிப்பில்,

“கரோனா நோய்த் தொற்று காரணமாக டிசம்பர் 2020இல் நடைபெறவிருந்த யுஜிசி-நெட் தேர்வுகள் நடைபெறவில்லை. டிசம்பர் 2020 மற்றும் ஜூன் 2021 ஆகிய ஆண்டுகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் தேசிய தேர்வு முகமையால் 20 ஜனவரி 2021 முதல் 5 ஜனவரி 2022 வரை நடத்தப்பட்டன.

81 பாடத்திட்டங்களுக்கு நாடு முழுவதும் 239 நகரங்களில் உள்ள 837 தேர்வு மையங்களில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வுகளை எழுதினர். இந்த தேர்வின் முடிவுகளை அறிவிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் பேராசிரியர் எம்.ஜெகதீஸ் குமார், தேசிய தேர்வு முகமையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இன்னும் ஓரிரு நாள்களில் தேர்வின் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.