போடியில் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்களிக்கும் முதியவர்கள்
போடியில் சனிக்கிழமை பிற்பகலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதியவர்கள் வாக்களித்தனர்.


போடியில் சனிக்கிழமை பிற்பகலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதியவர்கள் வாக்களித்தனர்.
போடி பகுதியில் காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. போடி நகராட்சியில் காலை 11 மணி நிலவரப்படி 25.64 சதவீதமும், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 41.98 சதவீதமும் வாக்குப்பதிவாகியிருந்தது.
போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 46.20 சதவீதமும் வாக்குப்பதிவாகியிருந்தது.
போடி மீனாட்சிபுரம் பேரூராட்சியில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 63.86 சதவீதமும் வாக்குப்பதிவாகியிருந்தது.

போடி மீனாட்சிபுரம் பேரூராட்சியில் 13 வது வாக்குச் சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு வேறு இயந்திரம் பயன்படுத்தப்ட்டது.
போடி பகுதியில் பிற்பகலில் கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில் வெயிலை பொருட்படுத்தாமல் முதியவர்கள், பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...