குச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தம்மம்பட்டி அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவன் கைது

தம்மம்பட்டி அருகே காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தற்கொலைக்கு தூண்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :3 மார்ச் 2022, 9:28 am

DIN

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே காதல் மனைவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து, தற்கொலைக்கு தூண்டிய கணவனை போலீசார் கைது செய்தனர். தற்கொலை செய்துகொண்டவர் 16 வயது சிறுமி என்பதால், கைதானவர் மீது போக்சோ வழக்கு பாய்கிறது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, செந்தாரப்பட்டி அங்கமுத்து மூப்பனார் தெருவைச் சேர்ந்தவர், மணிகண்டன் (27), பால்காரர். இவர், ஓர் ஆண்டுக்கு முன், ராசிபுரத்தை சேர்ந்த செல்வத்தின் 16 வயது மகளான, சிறுமி உமாமகேஷ்வரியை செந்தாரப்பட்டியில், உறவினர் வீட்டு விசேஷத்திற்கு வந்தார். அப்போது, சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி, அப்போதே மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இரு தரப்பிலும் பிரச்னை எழவில்லை.

இந்நிலையில், கடந்த 28 ஆம் தேதி இரவு மணிகண்டன்  தனது மனைவி உமாமகேஷ்வரியுடன் கடுமையாக தகராறு செய்ததாக் கூறப்படுகிறது. அதில் மனமுடைந்த உமாமகேஷ்வரி இரவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில், போலீசார், மர்ம மரணம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். 

முடிவில், உமாமகேஷ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக தெரியவந்ததையடுத்து, இ.பி.கோ.174-ன் கீழ், போலீசார் வழக்குப்பதிந்து, மணிகண்டனை நேற்று கைது செய்தனர். மேலும், 16 வயது சிறுமியை திருமணம் செய்து தற்கொலைக்கு தூண்டியதால், மணிகண்டன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.