வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கந்தர்வகோட்டை அருகே தலைமை ஆசிரியர் சாலை விபத்தில் பலி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வீரடிப்பட்டியில் வசித்து வரும் கோவிந்தராஜ் மகன் சக்திவேல்(46) என்பவர்

News image

சாலை விபத்தில் பலியான ஆசிரியர் சக்திவேல் படம்.

Updated On :4 மார்ச் 2022, 11:19 am IST

கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே வீரடிப்பட்டியில் வசித்து வரும் கோவிந்தராஜ் மகன் சக்திவேல்(46) என்பவர் ஆண்டிப்பட்டி அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

மேலும் இவர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதுக்கோட்டை மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவருக்கு திருமணமாகி பிரகதாம்பாள் என்ற மனைவியும், அருளி (19), பாலபாரதி (13 )என்ற மகளும் உள்ளனர். இவர் வியாழக்கிழமை இரவு  நடுப்பட்டியில் நடைபெற்ற திருவிழாவிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாக வீட்டுக்கு வராததால் சக்திவேலை நண்பர்கள், உறவினர்கள் தேடி வந்த போது  பருக்கைவிடுதி-பகட்டுவான்பட்டிக்கும் இடையே உள்ள பாலத்தில் சக்திவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் விழுந்து கிடந்துள்ளது. அருகில் சென்று பார்த்த போது சக்திவேல் உயிரிழந்து கிடந்துள்ளார். 

இதுகுறித்து கந்தர்வகோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். தகவலறிந்த காவல் ஆய்வாளர் அ.ம. செந்தில்மாறன், உதவி ஆய்வாளர் அருணகிரி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேல் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை மாவட்ட மருத்துவ கல்லூரி மருந்துவமனைமக்கு பிரேத  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சக்திவேல் உறவினர் தங்கராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசராணை செய்து வருகிறார்கள் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.