காரைக்குடி நகர்மன்றத் தலைவராக சே.முத்துத்துரை பொறுப்பேற்பு
சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு நிலை பெரு நகராட்சியான காரைக்குடி நகர்மன்றத் தலைவராக சே.முத்துத் துரை போட்டியின்றி


காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு நிலை பெரு நகராட்சியான காரைக்குடி நகர்மன்றத் தலைவராக சே.முத்துத் துரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னாள் நகர்மன்றத் தலைவராக இருந்தவர்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 36 வார்டுகளைக் கொண்ட காரைக்குடி பெரு நகராட்சியை திமுக கூட்டணி கைப்பற்றியது.
நகர்மன்றத் தலைவர் பதவிக்கு யார் என்பதை வெள்ளிக்கிழமை காலையில்தான் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் நகர்மன்றத் தலைவராக இருந்துவரும் 15-வது வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த சே.முத்துத்துரை பெயர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நகராட்சி ஆணையர் லெட்சுமணன் தலைவருக்கான சான்றிதழை வழங்கினார். அதைத்தொடர்ந்து முத்துத்துரை நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...