கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த சகிலா அறிவழகன் வெற்றி
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த சகிலா அறிவழகன் வெற்றி பெற்றுள்ளார்.


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த சகிலா அறிவழகன் வெற்றி பெற்றுள்ளார்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தேர்தலில் 9 திமுக கவுன்சிலர்கள், 3 அதிமுக கவுன்சிலர்கள், 1 விசிக, 1 பாமக, 1 சுயேச்சை கவுன்சிலர் வெற்றி பெற்றனர்.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவை சேர்ந்த அதிகாரப்பூர்வ வேட்பாளராக சசிலா அறிவழகனும், அவரை எதிர்த்து திமுக சார்பில் துர்கேஷ்வரி பாஸ்கர் போட்டியிட மனுதாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் தேர்தல் கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் ப.யமுனா தலைமையிலும், இளநிலை உதவியாளர் பிரபாகரன், தூய்மை பணி மேற்பார்வையாளர் குமார், பதிவரை எழுத்தர் ரவி, வரி தண்டலர் குணசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

மறைமுகமாக நடைபெற்ற இந்த தேர்தலில் 15 கவுன்சிலர்களும் ஒருவர் பின் ஒருவராக வாக்கு பெட்டியில் வாக்களித்தனர். தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சகிலா அறிவழகனுக்கு 9 வாக்குகளும், திமுக வேட்பாளர் துர்கேஷ்வரி பாஸ்கருக்கு 6 வாக்குகளும் கிடைத்த நிலையில் திமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர் சகிலா அறிவழகன் வெற்றி பெற்றார்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவராக திமுக நகரச் செயலாளர் அறிவழகனின் மனைவி சகிலா அறிவழகன் வெற்றி பெற்ற நிலையில் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் நிகழ்விடம் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அவரை பேரூராட்சி இருக்கையில் அமர வைத்தார்.
இதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மணிபாலன், திமுக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலபதி, எம்.எல்.ரவி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் ஆறுமுகம் உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி தலைவர் சகிலா அறிவழகன், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் திமுகவினரோடு சேர்ந்து கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...