
கண்ணூரில் வீட்டில் வெடிகுண்டு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில், பாஜக தொண்டர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
கேரளம் மாநிலம், கண்ணூரில் வீட்டில் வெடிகுண்டு தயாரித்தபோது ஏற்பட்ட விபத்தில், பாஜகவைச் சேர்ந்த 20 வயது இளைஞர் விஷ்ணு படுகாயமடைந்துள்ளார். வெடிவிபத்தில் அவரது உள்ளங்கைகள் முழுவதும் சிதறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதேபோல, கடந்த மாதம் கேரளம் காக்கயங்காடு பகுதியில் பாஜகவைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் வீட்டில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில், அவரது மனைவியும் படுகாயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.