புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லி கலால் கொள்கை வழக்கு: அரவிந்த் கேஜரிவாலுடன் 9 மணி நேரம் விசாரணை

மதுபானக் கொள்கை வழக்கில் 9 மணி நேர விசாரணைக்குப் பிறகு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிபிஐ அலுவலகத்தை விட்டு வெளியேறினார். 

News image
Updated On :16 ஏப்ரல் 2023, 4:19 pm

DIN

மதுபானக் கொள்கை வழக்கில் 9 மணி நேர விசாரணைக்குப் பிறகு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிபிஐ அலுவலகத்தை விட்டு வெளியேறினார். 

தில்லி அரசின் கலால் கொள்கையில் ஊழல் நடந்ததாகக் கருதி சிபிஐ விசாரணைக்கு தில்லி துணை நிலை ஆளுநா் விகே சக்சேனா கடந்த ஆண்டு பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து, சிசோடியா உள்ளிட்ட பலா் மீது சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்திருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் சிபிஐ கடந்த ஆண்டு நவம்பா் 25 -ஆம் தேதி தனது முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. 

இதைத்தொடர்ந்து தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தது. இதனிடையே இவ்வழக்கில் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அரவிந்த் கேஜரிவால் ஆஜரானார். 

அவருடன் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் பிற கட்சித் தலைவர்களும் சென்றனர். விசாரணைக்கு ஆஜரான கேஜரிவாலுடன் சுமார் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றுள்ளது. இதையடுத்து அவர் சிபிஐ அலுவலகத்தை விட்டு வெளியேறினார். விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னதாக கேஜரிவால் தலைநகர் ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம், பாஜக அரசு உத்தரவு பிறப்பித்தால் மத்திய ஏஜென்சி தன்னைக் கைதும் செய்யும் என்று கூறினார். இதனிடையே தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியதற்கு எதிராக ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள் தில்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.