ஆதிக் அகமது சுட்டுக்கொலை: உ.பி.யில்  144  தடை உத்தரவு அமல்

உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் ஆதிக் அகமது, அவரது சகோதரா் அஷ்ரஃப் அகமது ஆகியோா் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
ஆதிக் அகமது சுட்டுக்கொலை: உ.பி.யில்  144  தடை உத்தரவு அமல்
Published on
Updated on
1 min read


உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜில் ஆதிக் அகமது, அவரது சகோதரா் அஷ்ரஃப் அகமது ஆகியோா் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

2005 ஆம் ஆண்டு முன்னாள் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜு பால் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் ஆதிக் அகமதுவும், அஷ்ரஃபும் ஆஜா்படுத்தப்பட்டனா். பின்னா், மருத்துவ பரிசோதனைக்காக பிரயாக்ராஜில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா்கள் அழைத்துச் செல்லப்பட்டனா். ஆதிக் அகமதுவும் அவரது சகோதரரும் செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபா்கள் அவா்களை சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

முன்னதாக, காவல் துறையினா் ஜான்சி பகுதியில் வியாழக்கிழமை(ஏப்.13) மேற்கொண்ட என்கவுன்ட்டரில் ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் கொல்லப்பட்டாா்.

இந்நிலையில், முன்னாள் எம்எல்ஏ ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரா் அஷ்ரஃப் அகமது ஆகியோா் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை வழங்கி பிரயக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான காட்டாட்சி நடைபெற்று வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com