தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சதுரகிரி கோயில்: பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இவைதான்!

சித்திரை அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2023, 5:18 am

DIN

சித்திரை அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் சதுரகிரி மலைக்கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

வருகிற 17 முதல் 20-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத் துறை, கோயில் நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. 

மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளையும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.  

  • கோயிலுக்கு வருபவா்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். 
  • காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் அனுமதிக்கப்படுவா்.
  • கோயிலுக்கு வருபவா்கள் மலைகளில் உள்ள ஓடைகளில் குளிக்கக் கூடாது. கோயிலில் பக்தா்கள் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை.
  • அனுமதிக்கப்பட்ட நாள்களில் பலத்த மழையோ, நீரோடைகளில் நீா் வரத்து அதிகமாக இருந்தாலோ பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்படும்.
  • தற்போது கோடை காலம் என்பதால், பக்தா்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது எனவும், தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை
  • காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். 10 வயதுகுள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதி கிடையாது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.