கான்வே, துபே அதிரடி: ஆர்சிபிக்கு 227 ரன்கள் இலக்கு
முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 226 ரன்கள் எடுத்தது.


சிஎஸ்கே- ஆர்சிபி அணிகள் மொத்தம் 30 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 19 போட்டிகளிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்நிலையில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.
சிஎஸ்கே அணியில் மாற்றங்கள்: மகாலாவிற்கு பதிலாக பதிரனா வந்துள்ளார்.
ஆர்சிபி அணியில் மாற்றங்கள்: அணியில் எந்த மாற்றங்களும் இல்லை.
தொடக்க வீரரான ருதுராஜ் சொதப்பினாலும் டெவோன் கான்வே அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். துபே 27 பந்துகளில் 52 ரன்கள் அடித்தார். ரஹானே 37 ரன்களும் எடுத்தார். ராயுடு- 14 ரன்கள், மொயின் அலி- 18 ரன்கள், தோனி- 1 ரன்னும் எடுத்தார்கள்.
சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் 226 /6 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியில் சிராஜ், பர்னேல், வைஷக், ஹசரங்கா, ஹர்ஷல் படேல், மேக்ஸ்வெல் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...