அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் துப்பாக்கிச் சூடு: 4 பேர் பலி

அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயர்நிலைப் பள்ளி கால்பந்து வீரர் உட்பட 4 பேர் பலியாகினர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read


அமெரிக்காவில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயர்நிலைப் பள்ளி கால்பந்து வீரர் உட்பட 4 பேர் பலியாகினர். 28 பேர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் அலபாமாவின் சிறிய நகரமான டேடெவில்லியில் உள்ள நடன ஸ்டுடியோ ஒன்றில் சனிக்கிழமை இரவு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் மர்ம நபர்கள் நடந்திய துப்பாக்கிச் சூட்டில் உயர்நிலைப் பள்ளி கால்பந்து வீரர் உள்பட குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர். 28-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சாதாரணமாகிவிட்டன. 2023 இல் இதுவரை குறைந்தபட்சம் 163-க்கும் அதிகமான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com