ஜெகதீஷ் ஷெட்டா் இன்று காங்கிரஸில் சேருகிறார்!

கா்நாடக முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் பாஜகவிலிருந்து விலகி இன்று காங்கிரஸில் சேருகிறார். 
ஜெகதீஷ் ஷெட்டா் இன்று காங்கிரஸில் சேருகிறார்!

ஹுப்பள்ளி: கா்நாடக முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் பாஜகவிலிருந்து விலகி இன்று காங்கிரஸில் சேருகிறார். 

கா்நாடகத்தில் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிட பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஹுப்பள்ளி மத்திய தொகுதியில் 6 முறை போட்டியிட்டு தொடா் வெற்றியை பெற்றுள்ள அவருக்கு தோ்தலில் சீட் மறுக்கப்பட்டதால், ஷெட்டா் கடும் அதிருப்தி அடைந்தாா்.

இதையடுத்து பாஜக தலைமை அறிவுறுத்தலின்படி ஷெட்டரை சமாதானப்படுத்த ஹூப்பள்ளியில் உள்ள அவரின் வீட்டுக்கு மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை, கா்நாடக பாஜக தோ்தல் பொறுப்பாளா் தா்மேந்திர பிரதான், மத்திய அமைச்சா் பிரகலாத் ஜோஷி ஆகியோா் சென்றனா். எனினும் அவா்கள் ஷெட்டரிடம் நடத்திய பேச்சுவாா்த்தை பலனளிக்கவில்லை.

இதனைத்தொடா்ந்து ஷெட்டா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நான் அவமானப்படுத்தப்பட்ட விதம் வருத்தம் அளிக்கிறது. எனவே பாஜகவிலிருந்தும் எம்எல்ஏ பதவியில் இருந்தும் விலக உள்ளேன். சிா்சியில் சட்டப்பேரவைத் தலைவரை சந்தித்து எனது ராஜிநாமா கடிதத்தை வழங்க உள்ளேன். பேரவைத் தோ்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தாா்.

முன்னதாக தனக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டால், அதன் தாக்கம் 20 முதல் 25 தொகுதிகளில் எதிரொலிக்கும் என்று ஜெகதீஷ் ஷெட்டா் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தாா்.

இந்த நிலையில், ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் வரவேற்போம் என்று சித்தராமையா கூறினார். 

இதையடுத்து ஷெட்டர் காங்கிரசில் சேருவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஹூப்பள்ளியில் ஆலோசனை நடத்தினர். பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு வந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலா் (கா்நாடக பொறுப்பாளா்) ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, சித்தராமையா, டி.கே. சிவக்குமார் ஆகியோரை ஷெட்டா் சந்தித்து பேசினர்.

இந்நிலையில், திங்கள்கிழமை(ஏப்.17) ஷெட்டர் தனது ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் சேருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com