திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் பலி!

முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் பாலன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :28 ஏப்ரல் 2023, 5:39 am

DIN


முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் பாலன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம், முதுமலை தெப்பக்காடு பகுதியில் யானைகள் வளா்ப்பு முகாம் உள்ளது. இங்கு 28 வளா்ப்பு யானைகள் வனத் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், முகாமில் வளர்ப்பு யானை மசினிக்கு பாகன் பாலன் வெள்ளிக்கிழமை காலை உணவு கொடுப்பதற்காக அருகில் சென்றதாகத் தெரிகிறது. அப்போது யானை தாக்கியதில் பாகன் பிரசாந்த் பாலன்(55) படுகாயம் அடைந்தாா். 

இதையடுத்து பாகன் பாலனை சக பாகன்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கனவே, 2019 இல் சமயபுரம் கோயிலில் இருந்த மசினி யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.