வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அசாமில் மதுவுக்கு அடிமையான 300 போலீஸாருக்கு விருப்ப ஓய்வு அளிப்பு!

அசாம் காவல்துறையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுமார் 300 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :30 ஏப்ரல் 2023, 2:53 pm

DIN

குவாஹாட்டி: அசாம் காவல்துறையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுமார் 300 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அசாம் காவல்துறையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுமார் 300 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படுவதாகவும், அதே வேளையில் அதிகப்படியான மது அருந்துவது அவர்களின் உடல் பாதிக்கப்படுவதால்  அவர்களுக்கான விருப்ப ஓய்வுத் திட்டம் (வி.ஆர்.எஸ்) அரசு வழங்கியுள்ளது.

ஆட்சிப் பரவலாக்கம் குறித்தும் பணிபுரிந்து வருவதாகவும், 126 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் துணை ஆணையர் அலுவலகத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட அலுவலகங்களைத் திறப்பதற்கான செயல்முறையை முன்னெடுத்துள்ளதாகவும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.