அண்ணல் அம்பேத்கரின் 133-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133 -ஆவது பிறந்தநாளையொட்டி தைலாபுரத்தில் பாமக அரசியல் பயிலரங்க வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி, மாநிலத் துணைத் தலைவர் மொ.ப.சங்கர், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்ட நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.