பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு நெறியாளர் பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்
பெ. சுபாஷ் சந்திர போஸ்
பெ. சுபாஷ் சந்திர போஸ்
Published on
Updated on
1 min read

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் தேர்வு நெறியாளரும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவருமான பேராசிரியர் முனைவர் பெ. சுபாஷ் சந்திர போஸ் (73) இன்று (03.05.2024 ) அமெரிக்காவில் காலமானார்.

சிறிது காலம் உடல்நலக் குறைவாக இருந்த அவர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய இறுதிச் சடங்குகள் அமெரிக்காவிலேயே நடைபெறவுள்ளதாக நண்பர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மதுரை மாவட்டம் சமயநல்லூரில் பிறந்த இவர், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த் துறையில் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத் தேர்வு நெறியாளராக மூன்றாண்டு பதவி வகித்தவர். மேலும், பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் ஆகவும் பதவி வகித்தவர்.

இவருடைய மனைவி மல்லிகா, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் தாவரவியல் துறை பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவர்களுக்கு, நந்தினி, நர்மதா, நிவேதிதா என மூன்று மகள்கள்.

அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கியிருந்த சுபாஷ், உடல் நலக் குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். பாரதிதாசனும் தமிழியமும், எது புதுக்கவிதை உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். பல்வேறு நூல்களை வெளியிட்டுள்ளார். 15 முனைவர் பட்ட மாணவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட எம்பில் மாணவர்களை உருவாக்கியவர். இவரது மறைவுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று ஒரு மணி நேர இடைவேளை விடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்புக்கு: 94431 62085.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com