உ.பியில் கார் மீது லாரி மோதல்! மணமகன் உள்பட 4 பேர் பலி
கார் மீது லாரி மோதியதில் மணமகன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.


உத்தரப் பிரதேசத்தில் மணமகன் ஊர்வலத்தில் கார் மீது லாரி மோதியதில் மணமகன் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் காயமடைந்தனர்.
ஜான்சி-கான்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பரிச்சா என்ற இடத்தின் அருகே வெள்ளிக்கிழமை இரவு இவ்விபத்து நேரிட்டது.
விபத்து பற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஞானேந்திர குமார் கூறுகையில், பிலாட்டி கிராமத்தில் இருந்து சப்ரா கிராமத்திற்கு திருமண ஊர்வலம் வந்து கொண்டிருந்தபோது கார் மீது பின்னால் வந்த லாரி மோதியது.
இதனால் காரின் எரிவாயுத் தொட்டியில் தீப்பிடித்து கார் வெடித்துச் சிதறியது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அனைத்தனர்.
எனினும்,மணமகன் உள்பட 4 பேர் தீக்காயங்களால் உயிழந்தனர்.
தப்பியோடிய லாரி டிரைவரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என ஞானேந்திரகுமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...