பாலியல் குற்றவாளிக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மரண தண்டனை!
2016ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட கேரள மாணவி ஜிஷாவின் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


2016ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட கேரள மாணவி ஜிஷாவின் வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தில் உள்ள பெரும்பாவூரில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா என்பவர் புலம்பெயர் தொழிலாளி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று(மே 20) மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் சட்டம் பயின்ற மாணவி ஜிஷா(29) என்பவர், 2016ஆம் ஆண்டில் (ஏப்ரல் 28) அவரது வீட்டில் சடலமாகக் கிடந்தார்.
காவல்துறை அவரது உடலினைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையில்லாத நிலையில், தாயும் மனநலம் சரியில்லாத இல்லாத காரணத்தினால் விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரேதப் பரிசோதனையில் ’பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது’ தெரியவந்தது.
இச்சம்பவத்தின்போது கேரளத்தில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இச்சம்பவத்தினை அறிந்த பல தலைவர்களும், திரை பிரபலங்களும், மக்கள் பலரும் நீதிகேட்டு போராடி இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அசாம் மாநிலத்தை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி அமீர்-உல்-இஸ்லாம் என்பவர் தான் குற்றவாளி என விசாரணையில் தெரியவந்தது. குற்றவாளியை விசாரித்ததில் அவரும் குற்றத்தினை ஒப்புக் கொண்டார். 2016ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்திற்கு 8 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கிடைத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...