
ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த தந்தையும் மகனும் இஸ்ரேலிய பெண்ணிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்டதாகவும், அப்பெண்ணைக் கொன்றுவிட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ள விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜமால் ஹுசைன் அகமது ரேடியும் அவரது மகன் அப்தல்லாவும், கடந்தாண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது, ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து, பின்னர் கொன்றுவிட்டதாக விசாரணை அதிகாரிகளிடம் கூறும் விடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜமால் மற்றும் அப்தல்லா மார்ச் மாதத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப்படைகளால் கைது செய்யப்பட்டனர்.
18 வயது மகன், விசாரணை அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில், அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தபின், தந்தை கொலை செய்ததாக அப்தல்லா ஒப்புதல் கூறினார்.
காஸாவில் போரைத் தூண்டிய அக்டோபர் 7 அன்று, தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், 250க்கும் மேற்பட்டோர் கடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. ஹமாஸ் குழுவை அழிக்க இஸ்ரேலின் பதிலடி, காசாவில் 35,000க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு வழிவகுத்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.