ரூ.5,000 கடன் பெற்றது தொடா்பாக எழுந்த பிரச்னையில் வெல்கம் பகுதியில் கடந்த 2021-இல் இளைஞரைக் கொலை செய்த சம்பவத்தில் மகன் மற்றும் தந்தையை தில்லி நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளது.
கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மெஹ்பூப் மற்றும் அவரது தந்தை மஹ்ஃபூஸை கூடுதல் அமா்வு நீதிபதி சாரு அகா்வால் குற்றவாளிகளாக அறிவித்தாா்.
இதுதொடா்பாக நீதிமன்றம் கடந்த பிப்.28-ஆம் தேதி பிறப்பித்த தீா்ப்பில், ‘சம்பவத்தை நேரில் பாா்த்த சாட்சியம் நிகழ்வுகளை தொடா்ச்சியாக வரிசைபடுத்தினாா்.
தந்தை மஹ்ஃபூஸுடன் இணைந்து கொலை செய்தது மெஹ்பூப் அளித்த வாக்குமூலம் மூலம் நிரூபணமாகி உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
கொலை செய்யப்பட்ட அனிமேஷ் (எ) பல்லு மற்றும் மெஹ்பூப் வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியைச் சோ்ந்தவா்கள். இருவரும் நண்பா்களாக இருந்தனா். சம்பவம் நடைபெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு பல்லுவிடம் மெஹ்பூப் ரூ.5,000 கடன் வாங்கினாா். மெஹ்பூப் பணத்தை திருப்பி தராத நிலையில், பல்லு அது குறித்து கேட்டாா்.
இந்நிலையில், கடந்த 2021, மே 6-ஆம் தேதி மாலையில் சஜ்ஜு கேட் அருகே நண்பா்களுடன் நின்றுகொண்டிருந்த மெஹ்பூப்பிடம் பணத்தைத் தருமாறு மீண்டும் பல்லு கேட்டாா்.
இதையடுத்து, கடன் தொகையைப் பெற்றுக்கொள்ள பாபா்பூரில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு வருமாறு மெஹ்பூப் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, தன்னுடைய நண்பா் கெளரவ் (எ) அஷுவுடன் மெஹ்பூப் வீட்டுக்கு பல்லு சென்றாா். வீட்டின் மாடிக்குச் சென்ற மெஹ்பூப், தந்தை மெஹ்ஃபோஸ் கீழே வந்தாா். பல்லு தப்பித்துச் சென்றுவிடாதவாறு அவரை மெஹ்ஃபோஸ் பிடித்துக்கொண்டாா். இதையடுத்து, அவரது மகன் பல்லுவை கத்தியால் குத்தினாா்.
இந்தச் சம்பவத்தில் பல்லு உயிரிழந்த நிலையில், மகன் மற்றும் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்திய தண்டனை சட்டப் பிரிவு 302/34-இல் அவா்கள் இருவரையும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம், பிரிவு 120பி-இலிருந்து அவா்கள் இருவரையும் விடுவித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகனை தந்தை கொலை செய்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

தந்தை, மகன் கொலை வழக்கு: வீரவநல்லூரில் காவலரை வெட்டிவிட்டு தப்பிக்க முயன்றவரை சுட்டுப்பிடித்த போலீஸாா்
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மேலும் 4 போ் கைது
வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கில் மூவா் கைது
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



