முத்தலாக் தீர்ப்பை ஆதரித்துப் பதிவிட்ட கிரிக்கெட் வீரர் முகமது கைஃபுக்கு ட்விட்டரில் குவியும் ஆதரவு மற்றும் கண்டனம்!

இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமையில் பாரபட்சம் காட்டும் முத்தலாக் விவகாரத்தில் பல ஆண்டுகளாகப் பலருக்கும் வேறுபட்ட கருத்துகள் நிலவி வந்தன.
முத்தலாக் தீர்ப்பை ஆதரித்துப் பதிவிட்ட கிரிக்கெட் வீரர் முகமது கைஃபுக்கு ட்விட்டரில் குவியும் ஆதரவு மற்றும் கண்டனம்!

இஸ்லாமியப் பெண்களின் திருமண உரிமையில் பாரபட்சம் காட்டும் முத்தலாக் விவகாரத்தில் பல ஆண்டுகளாகப் பலருக்கும் வேறுபட்ட கருத்துகள் நிலவி வந்தன. தற்போது உச்சநீதிமன்றத்தின் ஐவர் நீதிபதிகள் குழு வெளியிட்ட தீர்ப்பின் படி முத்தலாக் முறை இந்திய அரசியல் சாசனத்துக்கு முரண்பட்டதாக இல்லா விட்டாலும் கூட, பெண்களின் திருமண உரிமையை எளிதில் பறிப்பதாக இருப்பதால், இப்படி ஒரு சட்டம் தேவை இல்லை. அது இஸ்லாமியப் பெண்களின் உரிமைகளுக்கு  தீங்கிழைக்கக் கூடியது எனக்கருதி 6 மாதங்களுக்கு அச்சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் 6 மாதங்களுக்குள் மத்திய அரசு, முத்தலாக் சட்டத்திற்கு மாற்றுச் சட்டத்தை இயற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை ஆதரித்து கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதரவுப் பதிவு ஒன்றை இன்று வெளியிட்டிருந்தார். முகமது கைஃப் ஒரு இஸ்லாமியர் என்பதால், இஸ்லாத்தின் ஷரியத் சட்டத்திற்கு முரணான இந்த தீர்ப்பை அவர் ஆதரிப்பதை விமர்சித்துச் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதில் சிலர்; 

  • உண்மையான இஸ்லாமியனாக, குரானை முறையாக ஓதுபவர்களாக இருந்தால் அவர்களுக்கு முத்தலாக் முறைக்கும், இன்ஸ்டண்ட் தலாக் முறைக்கும் நிச்சயம் வித்யாசம் தெரிந்திருக்க வேண்டும். இன்ஸ்டண்ட் தலாக் தான் அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது முத்தலாக் அல்ல என்றும்;
  • ஹே.. ட்விட் செய்யாதீர்கள், அது கொடிய பாவம் என்றும்;
  • முதலில் நீங்கள் குரான் வாசித்திருக்கிறீர்களா இல்லையா? அப்படி வாசித்திருந்தால் தானே உண்மையான பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு என்றால் என்னவென்று உங்களுக்குப் புரியக் கூடும்!
  • இஸ்லாத்தில் பெண்கள் மிகவும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள், உண்மையான முகமதியனென்றால் அதை நீங்களும் கண்டிப்பாக அறிந்தே இருந்திருக்க வேண்டும்! என்றும்;
  • முத்தலாக் குரானின் கொள்கைகளுக்கு முரண்பட்டது என உச்சநீதிமன்றம் அதை ரத்து செய்து விட்டது, சரி அப்போது... வந்தேமாதரத்தில் இருக்கும் வழிபாட்டு முறை கூட குரானின் கொள்கைகளிலிருந்து முரண்பட்டது தான். அப்படியானால் அதையும் ரத்து செய்து விடுமா உச்சநீதிமன்றம்?! என்றும் பல்வேறு விதமாக மக்கள் எதிர் வினையாற்றி வருகின்றனர்.

கைஃபுக்கு ஆதரவாகவும், எதிராகவும் வந்த ட்விட்களில் சில...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com