இது பழைய சர்வே... இப்போதாவது ‘ராகுல் காந்தி’ குறித்த இளம்பெண்களின் எண்ணம் மாறி இருக்குமா?!

இதில் கொடுமையான விஷயம் பதில் சொன்ன இளம்பெண்களில் ஒருவர், ராகுலுக்கு ’நோ’ சொல்லி விட்டு நரேந்திர மோடி புரபோஸ் செய்தால் ’ஓகே’ சொல்வேன் என்கிறார்.
இது பழைய சர்வே... இப்போதாவது ‘ராகுல் காந்தி’ குறித்த இளம்பெண்களின் எண்ணம் மாறி இருக்குமா?!

யூடியூபில் இப்படி ஒரு காமெடியான ஏன் சற்றே விஷமத்தனமான சர்வே வீடியோ காணக்கிடைத்தது. ஆங்கர் ஒருவர் இளம்பெண்கள் கூடி இருக்கும் இடங்களாகத் தேடிச் சென்று, ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உங்களிடம் புரப்போஸ் செய்தால், உங்களது ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்? அவரது புரப்போஸலை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேள்வி கேட்டார். இந்த வீடியோவில் ஒரே ஒரு பெண் கூட ராகுல் காந்தியின் புரப்போஸலை ஏற்றுக் கொள்வேன் என்றோ அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. வருங்காலத்தில் அவர் மிகச்சிறந்த தலைவராக வருவார். நேரு குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அவர் என்றோ மருந்துக்கு கூட சொல்லக் காணோம். 
சரி இவர்கள் ராகுலின் புரபோஸலை ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையா? என்பதல்ல பிரச்னை. ராகுல் குறித்த இளம்பெண்களின் கற்பனை என்னவாக இருக்கிறது என்பது தான் முதன்மையான பிரச்னை. ராகுல் காந்தி என்ன வேலை வெட்டி இல்லாதவரா? இந்த இளம்பெண்களை எல்லாம் தேடிச் சென்று புரபோஸ் செய்து கொண்டிருக்க. அவருக்கு அதை விடச் செய்வதற்கு உருப்படியான பல வேலைகள் இருக்கலாம். ஆனால், அந்த வேலைகள் அனைத்துமே ‘மக்கள் அபிமானம்’ என்ற அடிப்படையின் மேல் தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றால், அதிலேயே மனிதர் கோட்டை விட்டு விடுவார் போலிருக்கிறதே.

வீடியோ இந்தியில் இருந்தாலும் அந்தப் பெண்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பது நன்றாகவே புரிகிறது. இதில் கொடுமையான விஷயம் பதில் சொன்ன இளம்பெண்களில் ஒருவர், ராகுலுக்கு ’நோ’ சொல்லி விட்டு நரேந்திர மோடி புரபோஸ் செய்தால் ’ஓகே’ சொல்வேன் என்கிறார். பணமதிப்பிழப்பு சோகங்கள் எல்லாம் நடந்தேறுவதற்கு முந்தைய காலம் இது, அதனால் அந்தப் பெண் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், இதில் கவனிக்கத் தக்க விஷயம் என்னவென்றால் ராகுல் காந்திக்கு இளம்பெண்களிடையே இருக்கும் வரவேற்பும், மரியாதையும் தான். இந்தப் பெண்கள் சொல்லும் பதில்களில் முக்கால்வாசியும்;

  • ராகுல் காந்திக்கு ஐக்யூ இல்லை...
  • சுயமாக சிந்திக்கத் தெரியாதவர்
  • அவர் சுவாரஸ்யமான தலைவராக இல்லை அவரைப் பார்க்கவே சலிப்பாக இருக்கிறது.

- என்பதாகவே இருக்கிறது.

சிலரோ... அவரை வெறுக்கிறோம். என்ன காரணம் என்பது தெரியாமலே அவரை வெறுக்கத் தோன்றுகிறது என்கிறார்கள்.

சில பெண்கள் அவருக்கு வயதாகி விட்டது. ஆனால் அதற்கேற்ற சிந்தனைத்திறன் இல்லை என்கிறார்கள். சில பெண்கள் அவருக்கு சுயமாக சிந்திக்க மட்டுமல்ல சுயமாக இயங்கக் கூடத் தெரியவில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான உரையாடலின் போது ராகுல் காந்தி பிரதமர் மோடியை நேருக்கு நேராக பல கேள்விகளைக் கேட்டு விளாசித் தள்ளினார். அவரது கேள்விகளில் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள், பாதுகாப்பு அமைச்சகத்தின் ரஃபேல்ஸ் விமான ஒப்ப்ந்தம், நாட்டின் பொருளாதார நிலை, பெண்கள் பாதுகாப்பு எனப் பலகோணத் தாக்குதல்கள் இருந்தன. கடைசியாக பிரதமரை முகத்துக்கு நேராகவே, ‘நீங்கள் எனது கண்களை நேரடியாகப் பார்த்துப் பேசுவதை தவிர்க்கிறீர்கள். என்றும் குற்றம் சாட்டியிருந்தார். ராகுலின் குற்றச்சாட்டின் போது மோடியின் உடல்மொழியில் பதற்றம் தென்பட்டதாக ஊடகங்கள் கூட எழுதித் தள்ளின. தனது கனமான உரையோடு ராகுல் முடித்துக் கொண்டிருந்தால் பிரச்னையே இல்லை. ராகுலின் உரையின் மீதான பிரமிப்பிலேயே மக்கள் இப்போதும் கூட அவரைப் பாராட்டித் தள்ளிகொண்டே தான் இருப்பார்கள். ஆனால், ராகுல் கடைசியாக செய்த காரியம் அவர் ஏவிய அஸ்திரம் அவரையே திருப்பித் தாக்கும் வண்ணம் பூமராங் ஆக மாறியது தான் விந்தையிலும் விந்தை.

தனது உரையை முடிக்கும் முன் ராகுல் காந்தி, பிரதமரை நோக்கி, ‘நீங்கள் என்னை பப்பு என்று அழைத்தாலும் கூட உங்களை நான் துளியளவேனும் வெறுக்க மாட்டேன். உள்ளுக்குள் உள்ள வெறுப்பை அகற்றி விட்டு அன்பை  விதைப்பேன் என்று கூறி பிரதமரைக் கட்டியணைத்தார். இது நிச்சயம் அரசியல் நாகரிகமே தான், ராகுல் பண்பட்ட அரசியல் தலைவராகி விட்டார் என்று ராகும் ஆதரவாளர்கள் உடனடியாக அவரைப் பாராட்டத் தொடங்கி விட்டனர். இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறுபுறமோ, பாஜகவினர்... ராகுல் உரையை முடித்து பிரதமரை கட்டியணைத்து நகர்ந்ததும் தமது இருக்கையில் சென்று அமர்ந்து ராகுல் தமது சகாக்களைப் பார்த்து எப்படி என் திட்டம் என்பதாக கண் சிமிட்டுகிறார் பாருங்கள், இவர் இன்னும் பச்சா தான், குழந்தைத்தனம் கொண்டவர் தான் என்று முதல் நாளில் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையாற்றிய ராகுலின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை வெற்றிகரமாகச் செய்தனர்.

தம்மைச் சுற்றி நடக்கும் இப்படியான எதிர்க்கட்சிகளின் சதி வலைகள் குறித்த்அ ஞானமெல்லாம் ராகுலுக்கு ஏன் இல்லாமல் போனது. அவர் இன்னும் கொஞ்டம் மெச்சூர்டாக நடந்து கொள்ளலாமே என்பதாக இருக்கிறது ராகுல் அபிமானிகளின் மனநிலை.

அபிமானிகள் விருப்பத்திற்கு தோதாக ராகுல் மேலும் பண்படுவாரா? என்றால்;

அது ராகுலுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
 

Image Courtesy: MensXP.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com