"நான் மறைந்த பிறகு என் உடல் மீது மலர் மாலைகளை வைக்க வேண்டாம்; என் மடிமீது புத்தகங்களைப் பரப்புங்கள்'' என்று புத்தகங்கள் மீதான தன் தீரா வேட்கையை வெளிப்படுத்தியவர் நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு. புத்தகங்களால் உயர்ந்தவர்கள் உலகில் பலர் உள்ளனர்.
அதுதான் புத்தகங்களுக்கு உண்டான சிறப்பு. உலகில் புத்தகங்களுக்கு எத்துணை சிறப்பு இருக்கிறதோ அத்துணை பெருமை கொண்டவையாக விளங்குகின்றன நூலகங்கள். அறிவுக்கிடங்காக, அறிவின் புதையலாக அவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் இணைத்து எதிர்காலத்தை உருவாக்கும் ஆற்றல் மையங்களாக நூலகங்கள் திகழ்கின்றன.
உலகில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை 26 லட்சம்
ஆசியாவில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை 19 லட்சம்
இந்தியாவில் உள்ள நூலகங்களின் எண்ணிக்கை 15 லட்சம்
அத்தகைய நூலகங்கள் குறித்து ஒரு பார்வை...
உலகின் முதல் நூலகம்

* நிறுவப்பட்டது: கி.மு. 7-ஆம் நூற்றாண்டு
* மத்திய கிழக்கின் நினேவா பகுதியில் (தற்போதைய இராக்) அசிரிய ஆட்சியாளர் அசுர்பனிபால் என்பவரால் அமைக்கப்பட்டது.
* பண்டைய மத்திய கிழக்கின் எழுத்துகளால் ஆன சுமார் 30,000 கல்வெட்டுகளையும் பதிவுகளையும் கொண்டிருந்தது.
* அப்போதைய அறிஞர்களின் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன.
நாகரிகங்களின் நூலகங்கள்
உலகின் பல்வேறு பகுதிகளில் நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தபோது நூலகங்களும் வளர்ந்தன.

அலெக்ஸாண்ட்ரியா நூலகம், எகிப்து
*கிரீஸ்,
பாரசீகம் (இன்றைய ஈரான்), எகிப்து, இந்தியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 7,00,000 ஆவணங்கள் இருந்தன.
கலீஃப் அல்-அகம் நூலகம்
* இடம்: கோர்டோவா, ஸ்பெயின்
* நிறுவப்பட்டது: 10-ஆம் நூற்றாண்டு
* 4,00,000-க்கும் அதிகமான புத்தகங்கள்
உலகின் மிகப் பெரும் நூலகங்கள்
பிரிட்டிஷ் நூலகம், லண்டன்

* நிறுவப்பட்டது: 1973
* புத்தகங்கள், இதழ்கள், நாளிதழ்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை: 17 கோடி முதல் 20 கோடி வரை
லைப்ரரி ஆஃப் காங்கிரஸ், வாஷிங்டன், அமெரிக்கா

* நிறுவப்பட்டது: 1800
* அமெரிக்காவின் தேசிய நூலகமாக உள்ள நாடாளுமன்ற நூலகம்
* புத்தகங்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை: 17 கோடி
ஷாங்காய் நூலகம், சீனா

* நிறுவப்பட்டது: 1847
* புத்தகங்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை: 5.6 கோடி
இந்தியாவின் முக்கிய, பழைமையான நூலகங்கள்
திருவனந்தபுரம் நூலகம், கேரளம்

* நிறுவப்பட்டது: 1829
* நிறுவியவர்: அரசர் ஸ்வாதி திருநாள்
சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்

* நிறுவப்பட்டது: நாயக்க மன்னர்கள் காலம்
நாட்டின் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்ட அரிய ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கன்னிமாரா நூலகம், சென்னை

* நிறுவப்பட்டது: 1896
* தேசிய புத்தக களஞ்சியங்களுள் ஒன்று. நாட்டில் வெளியாகும் அனைத்து நூல்கள், இதழ்கள், நாளிதழ்களின் ஒரு பிரதி இங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்திய தேசிய நூலகம், கொல்கத்தா

* நிறுவப்பட்டது: 1836
* புத்தகங்களின் எண்ணிக்கை: 26.41 லட்சம்
* நாட்டுக்கு அர்ப்பணிப்பு: பிப்ரவரி 1, 1953
* தேசிய புத்தக களஞ்சியங்களுள் ஒன்று.
தில்லி பொது நூலகம்

* நிறுவப்பட்டது: 1951
* புத்தகங்களின் எண்ணிக்கை: 18 லட்சம்.
* ஹிந்தி, ஆங்கிலம், உருது, பஞ்சாபி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன.
* தேசிய புத்தக களஞ்சியங்களுள் ஒன்று.
சேஷாத்ரி நினைவு நூலகம், பெங்களூரு

* நிறுவப்பட்டது: 1915
* புத்தகங்களின் எண்ணிக்கை: 3 லட்சம்
* விருது: ராஜா ராம்மோகன் ராய் நூலக அறக்கட்டளை விருது (1999-2000)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


