ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியா? - போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கே முன்னுரிமை!

நாட்டில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் என பல முக்கியமான போட்டித் தேர்வுகளில் கூட ஆங்கிலம் முதல் விருப்ப மொழியாகக்
ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியா? - போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்திற்கே முன்னுரிமை!

நாட்டில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுகள் என பல முக்கியமான போட்டித் தேர்வுகளில் கூட ஆங்கிலம் முதல் விருப்ப மொழியாகக் கட்டாயமாக்கப்படவில்லை. தற்போது போட்டித் தேர்வுகள் 11 பிராந்திய மொழிகளுடன் ஆங்கிலம், இந்தியிலும் நடத்தப்படுகின்றன. இருப்பினும், இந்திய மாணவர்களால் விரும்பப்படும் முதல் தேர்வு மொழியாக ஆங்கிலம் மட்டுமே உள்ளது.

‘உள்ளூா் மொழிகளுக்கு மாற்றாகக் கருதாமல், ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்க வேண்டும்’ என்று நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-ஆவது கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறியிருந்த நிலையில், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இந்தி மற்றும் பிற பிராந்திய மொழிகளில் தயாராகும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) போன்ற முக்கியமான நுழைவுத் தேர்வுகளில், சுமார் 79 சதவிகித மாணவர்கள் தங்களது விருப்ப மொழியாக ஆங்கிலத்தை தேர்வு செய்ததாக தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியை 13 சதவிகித மாணவர்கள் மட்டுமே விருப்பமான மொழியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்,  8 சதவிகிதம் மாணவர்கள் மற்ற பிராந்திய மொழிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மேலும் நாட்டின் மிக முக்கியமான போட்டித் தேர்வுகளில் ஒன்றான நீட் தேர்வை நடத்தும் அமைப்பான தேசிய தேர்வு முகமை, இந்த ஆண்டு தேர்வு எழுதுவோரின் விருப்ப மொழியை பொறுத்து மொழி தேர்வு மற்றும் நீட் தேர்வு வினாத்தாள் அச்சிடப்படும் என்று கூறுயுள்ளது.

தேசிய தேர்வு முகமையின் படி, இந்த 13 மொழிகளில் ஆங்கிலம், இந்தி, அசாம், பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகியவை அடங்கும்.

நீட் தேர்வு மையத்தின் அடிப்படையில் பிராந்திய மொழிகள் தேர்வு செய்யப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

முதுநிலை நீட் தேர்வு 2020: ஒவ்வொரு மொழியின் அடிப்படையில் முதுநிலை நீட் தேர்வு 2020 இல் 2.04 லட்சம் விண்ணப்பதாரர்களில் தங்களது விருப்பப் பாடமாக 79.08 சதவிகிதம் பேர் ஆங்கிலத்தையும், 12.8 சதவிதம் பேர் இந்தியையும், 0.1 சதவிகிதம் பேர் தெலுங்கையும்  5,328 பேர் (0.33 சதவிதம்) அசாமியும் தேர்ந்தெடுத்துள்ளனர், 59,055 பேர் (3.7 சதவிதம்)  குஜராத்தியையும், 6,258 பேர் (0.39 சதவிதம்) மராத்தியையும், 17,101 பேர் (1.07 சதவிகிதம்)தமிழையும் தேர்வு செய்துள்ளனர், 36,593 பேர் (2.29 சதவிகிதம்) பெங்காலியையும், 1,005 பேர் (0.006 சதவிகிதம்) கன்னடத்தையும், 822 பேர் (0.05 சதவிகிதம்) ஒடிசாவையும், 1977 பேர் (0.12 சதவிகிதம்) உருதுவையும், 1.47 லட்சம் பேர் (91.88 சதவிதம்) ஆங்கிலம் மற்றும் இந்தியையும் தேர்வு செய்திருந்தனர்.

பிரபல கல்வியாளர் சி.எஸ்.காந்த்பால் கருத்துப்படி, போட்டித் தேர்வுகளில் முதல் மொழியாக ஆங்கிலம் விரும்பப்படுவதற்கு முக்கியக் காரணம் மாணவர்கள் தொடர்ந்து பயின்று வரும் பள்ளிக் கல்விதான் என்று கூறியுள்ளார்.

மேலும் "பள்ளிக் கல்வி முறை இன்னும் ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருப்பதால்தான், பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு, ஒரு மாணவரோ, மாணவியோ தனது எதிர்கால வாழ்க்கையை அல்லது உயர் கல்வியைத் தொடரும்போது, ​​​​அடுத்தடுத்த தேர்வுக்கு ஆங்கிலத்தை தேர்வு செய்கிறார்கள், ஏனென்றால் பள்ளியில் படிக்கும் போது, ​​அவர்கள் பல்வேறு பாடங்களையும் ஆங்கிலத்தில் மட்டுமே படித்திருக்கிறாள்" என்கிறார் காந்த்பால்.

நீட் 2022 தேர்வில் மொழியைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதல்களின்படி, ஆங்கிலத்தைத் தேர்வு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு நீட் 2022 தேர்வு விளக்க புத்தகம் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும். இந்தி மொழியைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்களுக்கு இருமொழி தேர்வு புத்தகமாக, அதாவது ஆங்கிலம் மற்றும் இந்தியில் வழங்கப்படும்.

பிராந்திய மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அவர்கள் தேர்ந்தெடுத்த பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலத்தில் இருமொழிகளில் விளக்க புத்தகம் வழங்கப்படும். பிராந்திய மொழிகளின் மொழிபெயர்ப்பில் ஏதேனும் தவறு இருந்தால், ஆங்கில பதிப்பில் இருப்பவையே இறுதியானதாக எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய குடிமைப் பணிக்கு தேர்வாகும் அதிகாரிகளுக்கு உத்தராகண்ட் மாநிலம் மசூரியின் 'லால்பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாதமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன்' (எல்.பி.எஸ்.என்.ஏ.ஏ)-இல் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாட்டின் பொதுச் சேவை மற்றும் பொது நிர்வாகம் குறித்த சிறந்த பயிற்சி மையமான இங்கு அடிப்படை பயிற்சி பெற்ற பின்னரே ஒதுக்கீடு செய்யப்படும் மாநிலங்களுக்கு அதிகாரிகள் பணி அமர்த்தபடுகின்றனர்.

இந்த பயிற்சி மையத்தில் குடிமைப் பணிக்கு தேர்வாகி 2019 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற 326  குடிமைப் பணி அதிகாரிகளில், 8 பேர் மட்டுமே இந்தியில் தங்கள் தேர்வை எழுதினர். மாறாக 315 பேர் ஆங்கிலத்தில் தங்கள் தேர்வை எழுதினர். 

இதேபோன்று 2018 ஆம் ஆண்டில் குடிமைப் பணி பயிற்சி பெற்றவர்களில் 370 பேர்களில் 8 பேர் மட்டுமே இந்தியிலும், 357 பேர் ஆங்கிலத்திலும் தேர்வை எழுதினர். 2016 இல், 377 பேரில், 13 பேர் மட்டுமே இந்தியில் தேர்வு எழுதினர் என்பது தெரியவந்துள்ளது.  

நாட்டில் புதிய கல்விக் கொள்கை அமலுக்கு வந்தாலும், நாட்டில் பள்ளியை விட்டு வெளியேரும் மாணவ-மாணவிகள் பெரும்பாலோர் தங்களது எதிர்கால வாழ்க்கையை அல்லது உயர் கல்வியைத் தொடர்வதற்கு முதல் தேர்வு மொழியாக ஆங்கிலத்தை தேர்வு செய்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மையாக உள்ள நிலையில், ‘உள்ளூா் மொழிகளுக்கு மாற்றாகக் கருதாமல், ஆங்கிலத்துக்கு மாற்றாக ஹிந்தியை மக்கள் ஏற்பார்களா?’ 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com